குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக இலாபம் பெறும் அரிசி ஆலை உரிமையாளர்கள் – அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன குற்றச்சாட்டு!

Friday, July 1st, 2022

முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளிநாட்டு அரிசியைக் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, உள்நாட்டு அரிசியுடன் கலந்து அதிக விலைக்கு விற்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரிசி கையிருப்பு இருப்பதாகவும், அவற்றை அரசாங்க உத்தரவாத விலையில் விற்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய இயற்கை விவசாயத்தினால் நாட்டின் நெற்செய்கை அழிந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், ஒரு தொழிலதிபர் என்ற வகையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தனது பங்களிப்பைச் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: