குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்து சேவையில் இணைக்க தீர்மானம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, March 26th, 2021

அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறை நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளது.

அத்துடன் புதிய வாகனங்களில் காணப்படும் அதி நவீன தொழிநுட்பம் குறித்து சாரதிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்று உருவாக்குவதின் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பயணிகள் போக்குவரத்து பேருந்து சாரதிகளுக்காக விசேட சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவது குறித்தும் அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: