குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம்முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தாய்லாந்தை தளமாகக் கொண்ட SIAM எரிவாயு நிறுவனத்திடமிருந்து திரவ பெற்றோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், இம்மாத இறுதி முதல் நாட்டின் எரிவாயு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்திசெய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானம்!
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இ...
2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக...
|
|