குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ. நா. அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவ வீரர்கள்!
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய இலங்கை கடற்படை!
இன்று சர்வதேச தாதியர் தினம் !
|
|