குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோரை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் நாளை முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரேரணைகள் இதன் போது கருத்திற் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் கிராமிய குழுக்கள் மற்றும் பிரதேச இணைப்புக் குழுக்களின் ஊடாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை தேயிலைக்கு வயது 150!
S.L.C இன் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு !
சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!
|
|