குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு நிதியளிப்பு – திறைசேரி அறிவிப்பு!
Tuesday, September 27th, 2022பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரி அறிவித்துள்ளது.
61,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த மாதத்திலிருந்து வருட இறுதி வரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த கொடுப்பனவை வழங்க முன்மொழியப்பட்டது. இந்தக் கொடுப்பனவு தேவைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது” என திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவீன மதிப்பீடுகளை உள்ளடக்கிய இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கடந்த ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், பல நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு ரூ.10,000 கொடுப்பனவு வழங்க முன்மொழியப்பட்டது. அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில் இருந்து 46,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|