குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை மின்சாரம் பெறுவதற்கு வசதியில்லாத குறைந்த வருமானம் பெறும் குடம்பங்களுக்கும் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இந்த மாதம் 6 ஆம் திகதிமுதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மின்சாரம் இல்லாத வீடுகளை அடையாளம் கண்டு, ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: