குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்காக 2,000 வீடுகள் – வீட்டுவசதி அமைச்சு அறிவிப்பு!

இந்த ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கு என ஏறத்தாழ 2,000 வீடுகளை கட்ட நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் 1,996 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும், கொட்டாவவில் நிர்மாணிக்கப்படும் 108 வீடுகள் கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 552 மில்லியன் யுவான் கடனின் கீழ் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களுக்கு 9 ஏ!
உணவுப் பொருள்கள் விற்பதில் அவதானம் - சுகாதாரப் பரிசோதகர்கள் !
அரச பணியாளர்களின் இடமாற்றக் கொள்ளை கல்விச்சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் - கல்வி அமைச்சர்
|
|
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்...
அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி...