குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Thursday, April 15th, 2021

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் 18 இலட்சம் பேருக்கு இக்கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பயனாளிகளில் சுமார் 75 சதவீதம் பேருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவர்களுக்கு அடுத்துவரும் சில நாட்களுக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: