குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் – நகர அபிவிருத்தி அதிகார சபை!

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசேட கடன் திட்டம் கடந்த முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகர மற்றும் ஓரளவு நகர அளவிலான பிரதேசங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களில் வீடுகளை விலைக்கு வாங்குவதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடமையாற்றும் இளம் சமூகத்தினருக்கு இந்த கடன் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் இக்கடன் திட்டத்தின் கீழ் ஆகக்கூடிய தொகையாக 1 கோடி ரூபா வழங்கப்படும். திருப்பி செலுத்தும் காலம் 25 வருடங்களாகும். அரசாங்க வங்கிகள் மூலம் இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
Related posts:
|
|