குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோரிக்கை!

Sunday, June 26th, 2022

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளை (27) முதல் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35% முதல் 40% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

நாளை நண்பகல் 12 மணிக்குள் பேருந்து கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால் எதிர்காலத்தில் பேருந்து சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: