குறைக்கப்பட்டது சமையல் எரிவாயுக்களின் விலை – எரிவாயு நிறுவனங்கள் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 3,790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,522 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 712 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் இன்று நள்ளிரவுமுதல் எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யவுள்ளது

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளது

அத்துடன் 5 கிலோ எடை கொண்ட காஸ் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: