குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் – தேயிலை சபை தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

இலங்கையில் குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

தேயிலை துாள்களின் தரத்தை அதிகரிப்பதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் தேயிலை உற்பத்தி படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.

தேயிலை கொழுந்தின் தரம் இன்மையே பிரதான காரணம் எனவும், உரங்கள் மற்றும் காலநிலை காரணிகளும் இதற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

ஏழு நாட்களுக்குள் தேயிலை கொழுந்தினை பறிக்க வேண்டும் என்ற போதிலும், 14 நாட்களுக்கு பிறகு கொழுந்தினை பறிப்பதன் மூலம் தேயிலை உற்பத்தியின் தரம் குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தேயிலை உற்பத்தியாளர்கள், கொழுந்து விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை தேயிலை உற்பத்தியை உகந்த மட்டத்திற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: