குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Saturday, February 26th, 2022

நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்கு அப்பால் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நீடித்தால், உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் உரிய பிரதேசம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தின் விபரங்களுடன் குறிப்பிடப்பட வேண்டுமென அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்றும் நாளையும் இரவு வேளைகளில் மின்வெட்டு இருக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: