குறிகாட்டுவான் – நயினாதீவு ஊடாக நவீன வீதி அமைக்க ஆலோசனை!

Wednesday, June 20th, 2018

குறிகாட்டுவான் – நயினாதீவு ஊடான போக்குவரத்து படகுப் பாதைக்குப் பதிலாக நவீன முறையைக் கொண்ட வீதி அமைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன் கொண்டு வரப்பட்ட திட்டம் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கருத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு இன்றி கைவிடப்பட்டது.

தற்போது மேற்படி திட்டம் வடக்கு மாகாண அமைச்சுக்கு ஊடாக மீண்டும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி குறிகாட்டுவான் – நயினாதீவு போக்குவரத்து வீதி அமைப்பது தொடர்பில் தீவகம் தெற்கு பிரதேச சபை தவிசாளருடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை படகுப் போக்குவரத்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: