குறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின் தலையீட்டை அடுத்து தீர்வு!

சுற்றுலாப் படகுச் சேவை காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்டுவதாக தெரிவித்து குறிகாட்டுவான் – நயினாதீவு தனியார் போக்குவரத்துப் படகுச் சேவையாளர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினை வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அவர்களின்; முயற்சியின் காரணமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
நயினாதீவு – குறிகாட்டுவான் பகுதியில் சுற்றுலா படகு சேவை மேற்கொள்ளப்படுவதன் காரணமாக நீண்டகாலமாக மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொண்டுவந்த தனியார் பேக்குவரத்து படகுச் சேவையாளர்கள் தமது வருமானம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வந்த நிலையில் அதற்கு பிரதேச சபையால் தீர்வு காணப்படாமையால் கடந்த வருடம் 8 ஆம் மாதத்தின் பின்னர் பிரதேச சபைக்கான வரிப்பணத்தை செலுத்தாது இடைநிறுத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த படகு சேவை நிர்வாகத்தினர் மற்றும் உரிமையாளர்களுடன் பிரதேச சபை தவிசாளர் பேச்சுக்களை மேற்கொண்டதுடன் குறித்த சுற்றுலா படகு சேவையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து தனியார் படகுச் சேவையாளர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு எட்டப்பட்டது.
வேலணை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் கருணாகரகுரமூர்த்தி –
உள்ளு+ராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் சில வருடங்களாக முடக்கப்பட்டிருந்த காரணத்தால் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டு வந்தனர்.
ஆனாலும் பெரும் இழுபறி நிலைமைகளுக்கு மத்தியில் உள்ளு+ராட்சி மன்ற தேர்தல் இவ்வாண்டு நடைபெற்று முடிந்தது. இதில் வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரப் பொறுப்பை இப்பகுதி மக்கள் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மீண்டும் தந்துள்ளனர்.
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சிகளால் தான் குறித்த நயினாதீவு மற்றும் குறிகாட்டுவானுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை தடையின்றி தொடர முடிந்தது. அது மட்டுமல்லாது தீவகத்தின் இதர பிரதேசங்களுக்கும் மக்களுக்கான போக்குவரத்து சேவையை முழுமையாக வழங்கக் கூடியதாக இருந்தது.
அத்துடன் இப்பகுதியில் படகுச் சேவையை நம்பி அதன் மூலம் வரும் வருமானத்தை நம்பி பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதேச சபை முடங்கிக் கிடந்தமையால் குறித்த பகுதி படகுச் சேவையாளர்கள் தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை காணமுடியாது பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.
தற்போது பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளமையால் குறிதத் படகுச் சேவையாளர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க கூடியதாக உள்ளது.
எனவே எமது வேலணைப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களது பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதேச சபை ஊடாகவும் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தின் பார்வைக்கு கொண்டுசெல்வதனூடாகவும் விரைவாக தீர்வுகண்டு சாதித்துக் காட்டுவோம் என்றார்.
Related posts:
|
|