குறிகாட்டவான் பகுதி கடலில்  மூன்று மீனவர் மாயம்:   பொலிஸில் புகார்!

Sunday, May 27th, 2018

குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

நேற்று  சனிக்கிழமை (26) மதியம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று  ஞாயிற்றுக்கிழமை (27) காலை வரை வீடு திரும்பவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது.

இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி இன்று  ஞாயிற்றுக்கிழமை (27)  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் கடற்படையின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளதாகவும், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts: