குரும்பசிட்டி–கட்டுவன் வீதிசெப்பனிடப்படவேண்டியதுஅவசியமானது.
Friday, May 5th, 2017
வலி. வடக்கு குரும்பசிட்டி– கட்டுவன் வீதி உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வீதியை தார் கொண்டு செப்பனிடப்பட வேண்டியதன் அவசியத்தை வலி. வடக்கு பிரதேசசபையிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
படைத்தரப்பினர் வசம் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இவ்வீதி கடந்த ஆண்டே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்ளும் வகையில் வலி. வடக்கு பிரதேச சபையினால் கடந்தவருடம் கிரவல் மண்கொண்டு செப்பனிடப்பட்டது.
இருந்தபோதிலும் அதிகளவு வாகனப் போக்குவரத்து காரணமாக குறித்தவீதி சேதமடைந்துள்ளதாகவும். இதனால் பாடசாலை மாணவர்கள், தொழில்துறை ஸ்தாபனங்களுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோரும் பயணங்களை மேற்கொள்வதில் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
மக்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னர்குறித்த இவ் வீதியூடாக வீடமைப்புத் திட்டப் பணிகளுக்காகவும், ஏனைய விடயங்களுக்காகவும் அதிகளவான வாகனங்கள் பயணிக்கும் நிலையில் வீதிசெப்பனிடப்படுவது அவசியமானது எனமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
|
|