குருநகர் தூய புதுமை மாதா திருத்தல வருடாந்த திருவிழா!

Wednesday, January 31st, 2018

 

 

குருநகர் தூய புதுமை மாதா திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா கடந்த புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாடுகள் தினமும் மாலை 5 மணிக்கு நடைபெற்று வருகின்றன.

யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நற்கருணைப் பெருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும் மறுநாள் வெள்ளிக்கிழமை திருத்தல திரு விழாவின் முதல் திருப்பலி காலை 5 மணிக்கும் இரண்டாவது கூட்டுத் திருப்பலியும் மெழுகுதிரி மந்திரித்தலும் காலை 6.30 மணிக்கு இடம்பெறும். அன்று மாலை 4.30 மணிக்கு தூய புதுமை மாதா திருச் சொரூபத் தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து திருச் சுரூப ஆசிரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: