குப்பை தொடர்பான எந்தப் பொறுப்பும் சம்பிக்கவிடம் ஒப்படைக்கப்படவில்லை

Monday, July 3rd, 2017

குப்பைகள் தொடர்பில் எந்தவொரு பொறுப்பும் தமது அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குப்பைகளை முறையாக சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற பொறுப்புக்கள் தமது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பொறுப்பான அமைச்சராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வௌியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது தொடர்பில் எந்தவொரு பொறுப்பும் தனது அமைச்சிடம் கொடுக்கப்படவில்லை என, சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் குப்பைகளை சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற பொறுப்புக்கள் மாகாண முதலமைச்சர் வசம் ஜனாதிபதியால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: