குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர் கருத்து!

Thursday, July 6th, 2017

குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்றங்கள் இடைக்கால தடைகளை ஏற்படுத்துவது, இந்த பிரச்சினையை மேலும் தீவிரமடைய செய்யும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜவலையில் குப்பைக்கூளங்களை கொட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இந்த மாதம் 20ம் திகதி வரையில் இடைக்காலதடையை விதித்துள்ளது.இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வைத்து ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.குப்பை கூளங்களை அகற்றுவது அத்தியாவசிய விடயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அதற்கு எவ்வாறு தடைவிதிக்கமுடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதேவேளை கரடியான பகுதியில் குப்பைக் கொட்டுவது தொடர்பில் கெஸ்பேவ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கையூட்டல் எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் வேதன திருத்தம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.இதன்போது வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் உவர்நீர் உட்புகுவதால் கரையோர மக்கள் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: