குப்பைகள் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை!

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரி கூழாங்குளம் செல்லும் வீதியோரத்தில் கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியில் காணப்படும் நீர் பாய்ந்து ஓடும் பகுதியில் வீட்டு கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு அவை குப்பை மேடாக காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த பகுதியில் கழிவுகள் நிரம்பி காணப்படுவதால் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளதுடன் அவை காற்று மற்றும் விலங்குகளால் அருகில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் எடுத்துச்செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்..
இந்த குப்பைகள் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு!
சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பிற்கான மதிப்பாய்வில் இலங்கை தெரிவாகும் சாத்தியம் அதிகரிப்பு!
கட்டுநாயக்க ஊடாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஹசீஷ் ரக போதைப்...
|
|