குப்பைகளை வீதிகளில் தீயிட்டால் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2017

யாழ்ப்பாணம் மாநகர பிரதேசத்தின் வீதியோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கொட்டித் தீயிட்டு கொழுத்துவோர் மீது சட்ட நடடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

குப்பைகளை தீயிட்டு காப்பெற் வீதிகள் பழுதடைகின்றன. சுற்றுச்கசூழலும் பாதிக்கப்படுகின்றது. மாநகரத்திற்கு உட்பட பிரதேசங்களில் சிலர் வீதியோரங்களில் அதுவும் காப்பெற் வீதிகளுக்கு அருகில் வைத்து குப்பையைக் கூட்டித் தீயிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தீயிட்டு கொழுத்துவோர் மீது சட்ட நடடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் திண்மக் கழிவுகள் தரம் பிரித்து சேகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை திண்மக் கழிவு அகற்றல் தொடர்பில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது வீதியோரங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குப்பை கொட்டுவோரை இனங்கண்டு தகவல் வழங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

MUNICIPAL

Related posts: