குப்பிளான் வடக்கில் பாழடைந்த வீட்டில் மிதிவெடி மீட்பு!

Monday, June 6th, 2016

யாழ்.குப்பிளான் வடக்குப்  பகுதியிலுள்ள  பாழடைந்த வீடொன்றிலிருந்த நேன்று ஞாயிற்றுக்கிழமை(05-06-2016) மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல். துஸ்மந்த தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை குறித்த பகுதியில் விறகு வெட்டுவதற்காகச்  சென்ற நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மிதிவெடி அடையாளப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடி விடுதலைப்புலிகளின் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மிதிவெடி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்க வைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts: