குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு உத்தரவு!

Thursday, October 5th, 2023

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவரினால் எறியப்பட்ட துண்டு பிரசுரத்தில் இது தொடர்பான தகவல் குறிப்பிடப்பட்டிருந்ததாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திடம் அறியப்படுத்தப்படுத்தியிருந்தனர். இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: