குடும்ப பெண்ணை காணவில்லை –  பொலிஸில் முறையீடு!

Monday, September 24th, 2018

கிளிநொச்சியில் குடும்பபெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில், குறித்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவரின் கணவர் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்று திரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்பபெண் இதுவரை வீடு திரும்பவில்லை என கணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணை தமது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் குறித்த பெண்ணின் கணவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, அண்மைக்காலமாக குடும்ப பெண்கள் வெளிநாடுகள் செல்வதும், காணாமல் போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், காணாமல் போன குறித்த குடும்பபெண் தொடர்பில் தகவல் கிடைக்குமிடத்து தெரியப்படுத்துமாறு குடும்பத்தினர் கோருகின்றனர்.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசாவை 0776753485 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோருகின்றனர்.

Related posts: