குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை!
Thursday, April 11th, 2024தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து இலட்சம் ரூபாய் ஆகும்.
இந்நிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து சில தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு தொகையயாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கும் இது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்’ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|