குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை!

Thursday, May 2nd, 2019

நாட்டில் சட்டவிரோதமாக தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முறையான விசா அனுமதிப் பத்திரமின்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேபோல் வீசா அனுமதிப்பத்திரமின்றி பலர் நாட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எச்.எம்.ஹலீமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியுள்ள அனைவரையும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: