குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோப்பு மக்கள் கோரிக்கை!

Wednesday, June 13th, 2018

நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதியில் வாழும் மக்கள் தாம் வாழும் குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –

தமது பகுதியில் வாழும் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினை  நிரந்தர காணி உரிமம்  தொடர்பான விடயமாகவே உள்ளது. அத்துடன் காணி உரிமம் இன்மையால் அரச மற்றும் தனியார் அமைப்புக்கள் வழங்கும் உதவித்திட்டங்களை பெற்றுக் கொள்வதில் நீண்டகாலமாக பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதனால் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட பலதரப்பட்ட சலுகைகள் இழக்கப்படும் துர்ப்பாக்கிய நிலையை தாம் எதிர்கொள்வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியதுடன் இந்த பிரச்சினைக்கு விரைவாக நிரந்தர தீர்வை பெற்றுத்தரமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட பின்  அம்பலம் இரவிந்திரதாசன் கருத்து தெரிவிக்கையில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தி காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தரவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே திருநெல்வேலி மேற்கு பகுதிக்கும் விஜயம் மேற்கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: