தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தவிடம் கோரிக்கை!

Saturday, April 30th, 2016
தங்களது குடியிருப்பு நிலங்களுக்கு காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1994 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதி நிலங்களில் தாங்கள் வாழ்ந்துவருவதாகவும் இன்றுவரை அதற்கான காணி உரிமங்கள் கிடைக்காமையினால் தாம் பல்வேறு பட்ட அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்த மக்கள் தமது வாழ்விடங்களின் காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
630 குடும்பங்களை உள்ளடக்கிய குறித்த பகுதி மக்களின் காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்துகொண்டதுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களது குடியிருப்பு நிலங்கள் தொடர்பான தரவுகளை தனக்கு தெரிவிக்கும்படியும் குறித்த விடயம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதி மக்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் இதர விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதியான தங்கராசா புஸ்பராசா குறித்த பகுதி மக்களது பிரச்சினைகளை செயலாளர் நாயகத்திடம் தெரிவிக்க ஒழுங்குகள் மேற்கொண்டிருந்தார். மேலும் குறித்த கிராமம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் மீள்குடியேற்றப்பட்ட கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20160430-WA0001

IMG-20160430-WA0000

Related posts: