குடிநீர் விநியோக நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

தரச்சான்று பெற்ற 164 குடிநீர் விநியோக நிறுவனங்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்தியுள்ள போதும், ஏனைய எந்தவொரு நிறுவனமும் பதிவை உறுதி செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழாய்க் கிணறுகளை அமைக்கும் 196 தனியார் நிறுவனங்கள் ஆழமான தோண்டுதல் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும், அவற்றில் 13 நிறுவனங்கள் மாத்திரமே அந்த தோண்டுதல் பணிக்கான தகுதி கொண்டவையாக அமைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
நீர் விநியோக சபையின் கலந்துரையாடல் ஒன்றின்போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, பதிவினை உறுதிப்படுத்தாத நீர் விநியோக நிறுவனங்களுக்கும், குழாய் கிணறு தோண்டும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தபால் சேவை ஊழியர்கள் நாளை நள்ளிரவுமுதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று: பெய்ஜிங் முழுவதும் ஊரடங்கு அமுல்!
செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த சுட்டி...
|
|