குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துறைசார் தரப்பினரிடம் நீர்வழங்கல் அமைச்சர் வலியுறுத்து!

Saturday, February 13th, 2021

நாட்டில் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் அமைச்சில் இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நாட்டில் பல பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளிலேயே இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுத்தமான குடி நீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் - ஜனாதிபதி ஆலோசனை!
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி - அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ்...
2024 ஆம் நிதிஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த...