குடிநீர் செயற்றிட்டங்களை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை – நகர அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்சு!

Tuesday, January 17th, 2017

 

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் செயற்றிட்டங்களை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாட்டினூடாக நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தனியாரினால் சுத்திகரிக்கப்படும் நீரை பெற்று பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு நீர்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்பாசன சேவை சங்கத்தின் பிரதம பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுதளிப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

National-Water-Supply-and-Drainage-Board_1-415x2602-720x480

Related posts: