குடாநாட்டை சுட்டெரிக்கும் வெயில்!

Monday, April 10th, 2017

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில நாட்களாக வழமையை விட அதிகரித்த வெப்பநிலை காணப்படுகிறது. இந்தச் சுட்டெரிக்கும் வெயிலால் பாதிப்பை உணர்வதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று 34.02 பாகை செல்சியஸ், நேற்று முன்தினம் 34.9 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளன.

இந்தக் கடும் வெப்பநிலையால் சுட்டெரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கால்நடைகளை வளர்ப்போர் கூறுகின்றனர். வழமையாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் 32 பாகை செல்சியஸ்ற்கு முன்பின்னாக வெப்பநிலை காணப்படும். தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வருடாந்தம் இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது. அதனாலேயே சுட்டெரிக்கும் வெப்பநிலை நிலவுகிறது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: