குடாநாட்டு கடற்பரப்பில் மீன் பிடிபாடு அதிகரிப்பு!

Friday, November 30th, 2018

தற்போதைய காலநிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டு கடற்பரப்பில் மீன்களின் பிடிபாடு அதிகரித்துள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் குருநகர், நாவாந்துறை, காக்கைதீவு, பாசையூர் மற்றும் தீவுப்பகுதி உள்ளிட்ட கடற்பகுதிகளில் மீன்களின் பிடிபாடுகள் அதிகரித்துள்ளன. கூடுதலாக ஒட்டி, ஓரா மீன்களே பிடிபடுகின்றன. மீன் பிடிபாடு தொடர்ச்சியாக நல்லமுறையில் இருப்பதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

எனினும் இறால், கணவாய், நண்டு போன்றவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றன. இறால் கிலோ ஆயிரம் ரூபாவாகவும் நண்டு கிலோ ஆயிரத்து 200 ரூபாவாகவும் கணவாய் கிலோ ஆயிரம் ரூபாவாகவும் விற்கப்படுகின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related posts: