குடாநாட்டில் 40,000 வீடுகளுக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் –  மின்சக்தி அமைச்சர் !

Saturday, February 11th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்குப்பிட்டி – கேரதீவு பகுதியில் அமையவுள்ள காற்றாலை மூலமாக மின்சாரம் பெறும் திட்டத்துக்கான 40ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியலம்ப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கூட்டு அரசு பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் சாதாரண (நீர்)  மின் திட்டத்திலிருந்து இயற்கை காற்றின் மூலமாக – காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. முன்னர் சாதாரணமாக 23ரூபாவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தக் காற்றாலை மின் உற்பத்தி மூலமாக 12ரூபா 29சதத்திற்கு வழங்கக்கூடியதாகவுள்ளது. இதனால் 60வீதம் குறைவான விலையில் மக்கள் நலத்திட்டத்தை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 19 காற்று விசிறிகள் பொருத்தப்பட்டு தலா 2மெகா வாட்ஸ் அடிப்படையில் 20 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது என்றார். மேலும் இந்தத் திட்டம் சாவகச்சேரி பிரதேச சபையின் நாவற்குழி உப அலுவலகப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது இந்த வேலைகள் துரிதமாக இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அரம்பிக்கும் நிலையில் மின்மார்க்க உயரழுத்த கம்பிகள் கேரதீவு சங்குப்பிட்டிக் பகுதியிலிருந்து சாவகச்சேரி மற்றம் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்ற இந்தத் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

download

Related posts: