குடாநாட்டில் வறட்சியினால் 24,000 குடும்பங்கள் பாதிப்பு யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2017

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறட்சியினால் விவசாய செய்கைகளில் 30 வீதமானவை அழிவடைந்ததால், 24,324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன என யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 30வீதமான நெற்பயிர்களுடன் சிறு தானியங்களும் அழிவடைந்துள்ளன. வறட்சி நீடித்தால் பயிர்கள் 100 வீதமானவை அழிவடையும். அழிவைத் தடுக்க முடியாத சூழலே காணப்படுகின்றது. இதுவரை கிடைக்கப்பற்ற தகவல்கள் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பாதிப்படைந்தவர்கள் 940 குடும்பங்கள், ஊர்காவற்றுறை 482 குடும்பங்கள், காரைநகர் 701 குடும்பங்கள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களுடன் கோப்பாயில் 1,242 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

சங்கானையில் 8,200 குடும்பங்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 5,838 குடும்பங்கள், உடுவில் 427 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேசத்தில் 1,213 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2,830 குடும்பங்களும், பருத்தித்துறையில் 255 குடும்பங்களும், மருதங்கேணியில் 430 குடும்பங்களுமாக மொத்தம் குடாநாட்டில் 24,324 குடும்பங்கள் இதுவரை பாதிப்படைந்துள்ளனர். வரட்சி தொடர்வதால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Vethanayakan

Related posts: