குடாநாட்டில் மழை…! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனேக பகுதிகளில் நேற்று தொடக்கம் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. நேற்று. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை மாலை வேளையில் பல பகுதிகளில் அதிகமாக பெய்ததுடன் இன்று (21) காலையும் தொடர்ந்து பெய்துவருகின்றது.
சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு...
டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ...
கல்வி நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பான சுற்றுநிருபம் - நாட்டில் 1,220 பாடசாலை கொத்தணிகள் அமைக்கப்படும் ...
|
|