குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இன்மையே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் – வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்!

யாழ் குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாமையின் காரணமாக அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் 30 வருட காலமாக நிலவிய யுத்தம் காரணமாக போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் நெடுஞ்சாலை வீதிகள் தொடர்பான அறிவு இல்லாமல் போயுள்ளது. இதனால் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் 64 முக்கிய வீதி சந்திப்புகள் உள்ளதாகவும், அவற்றில் மூன்றில் மாத்திரமே போக்குவரத்து சமிஞ்சைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி கற்ற மக்களுக்காக வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விபத்துக்களை குறைப்பதற்காக யாழின் முக்கிய வீதி சந்திப்புகளில் போக்குவரத்து சமிஞ்சைகள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|