குடாநாட்டில் புகையிலை அறுவடை ஆரம்பம்!

வடமராட்சிப் பிரதேசத்தில் புகையிலை அறுவடை ஆரம்பமாகியுள்ளது. குறித்த புகையிலை அறுவடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கும் என விவசாயிகள் தெரித்துள்ளனர்.
குடாநாட்டில் வடமராட்சி பிரதேசத்தில் இம்முறை அதிகளவு பரப்பளவில் புகையிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தமுறை புகையிலை விளைச்சல் திருப்திகரமாக இருந்ததாக புகையிலை செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
பிரதேசத்தில் அறுவடை செய்யப்படும் புகையிலை செடி ஒன்று 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேவேளை வலிகாமம் பிரதேசத்தில் அறுவடை செய்யப்படும் புகையிலையையும் வடமராட்சி பிரதேச புகையிலை வர்த்தகர்கள் கொள்வனவு செய்துவருகின்றனர். வலிகாமம் பிரதேசத்தில் புகையிலை செடி ஒன்று 110 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அறுவடை செய்யப்பட்ட புகையிலையை கொள்வனவு செய்த புகையிலை வர்த்தகர்களும் உற்பத்தியாளர்களான சில விவசாயிகளும் அவற்றை உலர்த்தி புகையிட்டு பதனிடும் பொருட்டு சுவர்களில் வெயிலில் காய போட்டுவருகின்றனர்.
புகையிலை பயிர் வடமராட்சியின் பிரதேச விவசாயிகளின் பணப்பயிர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|