குடாநாட்டில் தேடுதல் நிறுத்தப்படாது – யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Friday, November 24th, 2017

வாள்வெட்டுக் குழுவில் உள்ள கடைசி உறுப்பினரைக் கைது செய்யும் வரை பொலிஸ் வேட்டை தொடரும் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஞராசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பலர் பொலிஸ் பிணையில் சென்றுள்ளனர். ஆனால் தேவையேற்படின் அவர்களை மீண்டும் கைது செய்வோம். வாள்வெட்டுக்குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் விபரங்களைப் பெற்றுள்ளோம். அந்தக் குழுக்களைச் சேர்ந்த கடைசி உறுப்பினரை கைது செய்யும் வரையில் எமது தேடுதல் வேட்டை தொடரும்.

இளவாலை, அச்சுவேலி, காங்கேசன்துறை, பலாலி மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினமும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இதனால் மகக்கள் வீணாக பதற்றம் அடையவோ குழப்பம் அடையவோ தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: