குடாநாட்டில் கொடூரம்! ஒரே இரவில் 3 இடங்களில் வாள்வெட்டு.!!

Tuesday, January 17th, 2017

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு – குழு மோதல்கள் இடம்பெற்றுள்ளது இதனால் இந்த மோதல்களில் பல அவயவங்கள் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் – பீதியும் அடைந்துள்ளனர்.

அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் – வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன.அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும், ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும் கடந்த சனிக்கிழமை கைலகலப்பு நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், அச்சுவேலி தெற்கு கரந்தடிக்குச் சென்று மோதல்களில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல்களின்போது, வாள் வெட்டில் காது, மூக்கு, கண் என்பன துண்டாடப்பட்ட நிலையில் இளைஞர்கள் 7 பேர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக உடனடியாகவே அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இதனிடையே அரியாலை முள்ளிப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது.

இதன்போது வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்று விட்டனர்.

அத்துடன் ஏழாலை வடக்கில் நேற்றுமுன்தினம் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை, மூன்று இளைஞர்கள் மறித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கத்தி, வாள் ஆயுதங்களைக் காண்பித்து அவர்கள் மிரட்டியும் காரில் இருந்தவர்கள் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களைத் தாக்கியுள்ளனர். மயானத்தில் கிரியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி கிராம அலுவலர் மீதும், மூவர் கொண்ட இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0686a1

Related posts: