குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!

யாழ். குடாநாட்டில் செய்கையாளர்கள் காலபோக உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
கமநல சேவைகள் நிலையம் ஊடாக செய்கையாளர்களுக்கு விதை கிழங்குகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரங்களில் மேலும் ஒரு தொகுதி விதை உருளைக்கிழங்குகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட விதை கிழங்குகளில் முளை திறன் காணப்படாததினால் அவற்றை நடுகை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் இந்த விதைக் கிழங்குகளை நடுகை செய்யும் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
Related posts:
சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கி...
சோளம் பற்றாக்குறை: திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது!
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவ...
|
|