குடாநாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அரசு நடவடிக்கை!

Thursday, March 10th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அமைச்சர் சாகல ரட்னாயக்க நாளை (11) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரட்னாயக்க நேற்று(09) நாடாளுமன்றில் பதிலளித்தபோதே குறித்த விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அண்மைய காலத்தில் குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கலை கலாசார சீர்கேடுகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு சபையில் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இரவு நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் உடனடி வீதித் தடைகள் சுற்றிவளைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

நாளைய(11) தினம் யாழ்.குடாநாட்டுக்கு வரும் அமைச்சர் சாகல ரட்னாயக்கவுடன் பொலிஸ்மா அதிபரும் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: