கீரிமலை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பு!

Tuesday, February 19th, 2019

கீரிமலை கடற்கரையில் மிதந்துவந்த சடலம் ஒன்றினை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பின் சடலத்தை மீட்பதற்கான பணிகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு அரை காற்சட்டையுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கடலில் மிதந்து வந்ததா? அல்லது நீராட சென்று உயிரிழந்தவருடையதா? கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: