கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டு மனு விசாரணைகள் நிறைவு!

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் பிரஜா உரிமைகளைக் கொண்டுள்ள காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதாவின் மேற்படி விசேட மேன்முறையீடு தொடர்பில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது. மேலும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் எழுத்து மூல ஆவணங்களை மன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Related posts:
மே- 2 ஆம் திகதியை வர்த்தக விடுமுறையாகப் பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்!
போக்குவரத்து துறை தனியார்மயமாகாது – அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா!
|
|