கீதா குமாரசிங்கவின் பதவி முன்னாள் அமைச்சருக்கு!

Friday, November 3rd, 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பதவியானது முன்னாள் அமைச்சர் பியசேனவிற்கு வழங்கப்படவுள்ளது.

இவர் இரட்டைக் குடியுரிமை உடையவர் என்பதனால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இத்தீர்ப்பு கிடைத்ததும் அவரது பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே கீதாகுமாரசிங்கவிற்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பானது இடம்பெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கீதா குமாரசிங்க போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.

ஆயினும் அவர் சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் குடியுரிமை உடையவர் என்பதால், 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts: