கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில்  ஈழமக்கள் ஜனநாயக கட்சி அக்கறை!

Thursday, April 28th, 2016
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய   திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் கடந்த நான்கு நாட்களாக ஆரம்பித்த சுழற்சி முறையிலாபன உண்ணாவிரத போராட்டத்திற்க இதுவரை உறுதியான தீர்வுகள் கிடைக்கப்பெறாததன் காரணமாக குறித்த தொண்டராசிரியர்கள் சிலர் சாகும்வரை தாம் உண்ணாவிரத போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்து தமது போராட்டத்தை நேற்றையதினம் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவகத்துக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 364 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்
குறித்த தொண்டராசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதியான தங்கராசா  புஸ்பராசா அவர்கள் மூலம் தொண்டராசிரியர்களின் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் இந்த விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்ததுடன் தொண்டராசிரியர்களது நியாயமான போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமது பூரண ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
image-8ae02daad5239208fadaa77ae048bc60d52ecc477fb866d4f100752638f04e3d-V

image-ddfd885965f249f6c28513aff17901975b10c6bebe73e63abd294902c3d3bc11-V image-4561750a59ead6bbdd38ead2d4253bc66c24ff3e3488a46b66765de83fd22be7-V

 

Related posts: