கிழக்கில் 91 ஆயிரம் கிலோ சேதனப் பசளை இராணுவத்தினரால் விநியோகம்!

Monday, November 29th, 2021

பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனைப் பசளையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் இதுவரை 25,000 தொன்களுக்கு மேல் உற்பத்தி செய்ததன் மூலம் இந்தத் தேசியத் திட்டத்திற்குப் பங்களித்து வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் சேதனைப் பசளையை வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட 91,000 கிலோகிராம் சேதனைப் பசளையை அரசாங்கத்திற்குச் சொந்தமான லக் பொஹொர சிலோன் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலதிக பசளையை லக் பொஹொர சிலோன் உர நிறுவனம் விவசாய சமூகத்தினரிடையே விநியோகிக்கும் அது மாத்திரமன்றி, எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் கால்நடைப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள அனைத்து படைப்பிரிவுகளும் இத்திட்டத்திற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கும் என பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா திருகோணமலையில் உள்ள 22 வது பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

சேதனைப் பசளை திட்டத்தின் 2 வது கட்டமானது கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கிழக்கைத் தளமாகக் கொண்ட அனைத்து படையினரின் கூட்டு முயற்சிகளாகும்.

அரசாங்க அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை 22 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்றது. லக் பொஹொர சிலோன் உரக் கம்பனியின் பிராந்திய முகாமையாளர் எம் தம்மிக்க ரத்நாயக்க இந்த நிகழ்வில் குறித்த தொகையினை அடையாளமாக ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கான பிரதம அதிதியை சம்பிரதாய கையளிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 22 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே ஆகியோர் வரவேற்றனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந் நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற்றது.

முன்னதாக, 26 ஒக்டோபர் 2021 அன்று, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் 86,961 கிலோ சேதனைப் பசளை அரச சேதனை பசளை திட்டத்திற்காக சிலோன் உர கம்பெனி லிமிடெட்டிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: