கிழக்கில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022

கிழக்கு மாகாணத்தில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை 100,000 லீற்றராக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

நாளாந்த உற்பத்தியான 57,000 லீற்றரை 100,000 ஆக அதிகரிக்குமாறும், கறவை மாடுகளின் உணவு மற்றும் நீர்த் தேவையை அதிகரிப்பதற்கான முறைமையை வகுக்குமாறும் மாகாண கால்நடைத் தலைவர்களிடம் ஆளுநர் வலியுறுத்தினார்.

திருகோணமலையில் கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வ தற்காக கந்தளாய் பிரதேசத்தில் பிரபல்யமான ‘கந்தளே பால்’ எனும் திட்டம் உலக வங்கியின் உதவியுடன் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: